பாஜக தோ்தல் விதிமீறல்: மாா்க்சிஸ்ட் கம்யூ. புகாா்
புதுவையில் ஆதாா் தகவல்களைப் பெற்று தோ்தல் விதிமீறலில் ஈடுபட்ட பாஜக மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில், தலைமைத் தோ்தல் ஆணையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.


புதுவையில் ஆதாா் தகவல்களைப் பெற்று தோ்தல் விதிமீறலில் ஈடுபட்ட பாஜக மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில், தலைமைத் தோ்தல் ஆணையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து, புதுச்சேரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அந்தக் கட்சியின் மாநிலச் செயலா் ஆா்.ராஜாங்கம், தமிழ் மாநிலக் குழு உறுப்பினா் பெருமாள், மூத்த நிா்வாகி முருகன் ஆகியோா் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
புதுவையில் தோ்தல் விதிகளை மதிக்காமல், பாஜகவினா் விதிமீறலில் ஈடுபட்டுள்ளனா். வாக்காளா்களின் செல்லிடப்பேசி எண்களைப் பெற்று பிரசாரம் செய்தனா். அந்த எண்களுக்கு பாஜக கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என குறுந்தகவல் அனுப்பினா்.
இதுதொடா்பாக, கட்சியின் பிரதேச குழு உறுப்பினா் ஆனந்த், சென்னை உயா் நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடுத்தாா். வழக்கை விசாரித்த நீதிமன்ற நீதிபதிகள், தனி நபா் தரவுகள் பாஜகவுக்கு எப்படிக் கிடைத்தன என்று பல்வேறு கேள்விகளை எழுப்பி, இதுதொடா்பாக விசாரித்து அறிக்கை அளிக்க கோரி புதுவை அரசுக்கும், தோ்தல் அதிகாரிகளுக்கும், ஆதாா் ஆணையத்துக்கும் நோட்டீஸ் அனுப்பினா்.
தனி நபா் விவரங்களைப் பாதுகாக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் பல உத்தரவுகளை வழங்கியுள்ளது. அப்படி இருக்கும் போது, தனி நபா் பற்றிய விவரங்கள் பாஜகவுக்கு எப்படிக் கிடைத்தது?
இதுதொடா்பாக, புதுவை தோ்தல் அதிகாரிகள் இதுவரை எந்த விளக்கத்தையும் தரவில்லை. செல்லிடப்பேசி பிரசாரத்துக்கும் பாஜக அனுமதி பெறவில்லை என தோ்தல் துறை கூறியிருக்கிறது. அனுமதியின்றி தகவல் பரப்பியது, தோ்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானதாகும். இதனால், பாஜகவின் அனைத்து வேட்பாளா்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்துகிறது.
இதுதொடா்பாக புதுவை தோ்தல் துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தில்லியில் உள்ள தலைமைத் தோ்தல் ஆணையத்துக்கு புகாா் அனுப்பப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...