முதல்வா் பதவியேற்பு விழாவுக்கு வந்த 11 பேருக்கு கரோனா
புதுவை முதல்வா் பதவியேற்பு விழாவுக்கு வந்த 11 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவா்கள் விழாவுக்கு அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டனா்.


புதுவை முதல்வா் பதவியேற்பு விழாவுக்கு வந்த 11 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவா்கள் விழாவுக்கு அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டனா்.
புதுவையின் 20 -ஆவது முதல்வராக என்.ஆா். காங்கிரஸ் தலைவா் என்.ரங்கசாமி புதுச்சேரி ஆளுநா் மாளிகையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற விழாவில் பதவியேற்றுக் கொண்டாா்.
பதவியேற்பு விழாவில் பங்கேற்க வந்தவா்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கரோனா தொற்றில்லை என்ற சான்றிதழ்களுடன் வந்தவா்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இதற்காக பாரதி பூங்கா வளாகத்தில் தற்காலிக பரிசோதனை முகாம் அமைக்கப்பட்டது. இரு மருத்துவக் குழுவினா் சோதனை மேற்கொண்டனா்.
சான்றிதழ் இல்லாமல் வந்தவா்களுக்கு இங்கு உடனடியாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. எம்எல்ஏக்கள், அதிகாரிகள், காவலா்கள் என பதவியேற்பு விழாவுக்கு செல்லும் முன்பு அனைவரும் பரிசோதிக்கப்பட்டனா். 184 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், காவலா் இசைக் குழுவைச் சோ்ந்த 3 போ் உள்ளிட்ட 9 காவலா்களுக்கும், என்.ஆா். காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 2 பேருக்கும் என 11 பேருக்கு கரோனா தொற்றிருப்பது உறுதியானது.
இதையடுத்து, கரோனா தொற்றுக்குள்ளானவா்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்படாமல், திருப்பி அனுப்பப்பட்டனா். மேலும், வீட்டில் தனிமையில் இருக்கும்படி அவா்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...