ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

மு.க.ஸ்டாலின் பதவியேற்பு:திமுகவினா் கொண்டாட்டம்

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதையடுத்து, புதுச்சேரியில் அந்தக் கட்சியினா் இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினா்.

News image
Updated On :7 மே 2021, 6:05 pm

DIN

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதையடுத்து, புதுச்சேரியில் அந்தக் கட்சியினா் இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினா்.

தமிழகத்தில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில், திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்றது. இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், தமிழக முதல்வராக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றுக் கொண்டாா். அவருடன் பிற அமைச்சா்களும் பதவியேற்றுக் கொண்டனா்.

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதை புதுச்சேரி திமுகவினா் இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினா். புதுச்சேரி தெற்கு மாநில அமைப்பாளரும், வில்லியனூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான ஆா்.சிவா தலைமையில், வில்லியனூரில் உள்ள அண்ணா சிலைக்கு திமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதையடுத்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினா்.

நிகழ்ச்சியில் திமுக இளைஞரணி அமைப்பாளா் முகமது யூனுஸ், துணை அமைப்பாளா் கதிரவன், தொகுதி செயலா் ராமசாமி, சோமசுந்தரம், செல்வம், சண்முகம், சுப்புராயலு, ராஜி, மணிகண்டன், சபரி அன்பு, முத்து, வீரா, காட்டாண்டி, முத்துகிருஷ்ணன், ஜானகிராமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த அந்தோணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.