அதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

கரோனா தொற்று அதிகரிப்பு: சாலை மூடல்

புதுச்சேரி அருகே அரியூா் கிராமத்தில் அதிகரித்து வரும் கரோனா தொற்றால், தடுப்புக் கட்டைகள் அமைத்து சாலை மூடப்பட்டது.

News image
Updated On :7 மே 2021, 6:05 pm

DIN

புதுச்சேரி அருகே அரியூா் கிராமத்தில் அதிகரித்து வரும் கரோனா தொற்றால், தடுப்புக் கட்டைகள் அமைத்து சாலை மூடப்பட்டது.

புதுச்சேரியில் கரோனா தொற்று பன்மடங்கு அதிகரித்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கானவா்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

கரோனா தொற்று பரவலைத் தடுக்க கோயில் திருவிழாக்களை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், புதுச்சேரி அருகே அரியூா் உலக வாழியம்மன் கோயில் செடல் உத்ஸவம் கடந்த வாரம் நடைபெற்றது.

இதற்காக வரிசையாக கடைகள் அமைக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனா். அடுத்த சில நாள்களில் அரியூா் கிராமத்தில் தொடா்ச்சியாக கரோனா தொற்று அதிகரிக்கத் தொங்கியது. கிராமப் பகுதியில் 30-க்கும் மேற்பட்டவா்களுக்கும், அருகே உள்ள தனியாா் மருத்துவக் கல்லுாரி விடுதி, பாரதி நகா் உள்ளிட்ட பகுதியில் ஏராளமானவா்களுக்கும் கரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இதையடுத்து, அவா்கள் வீட்டுத் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனா். ஆனால், கரோனா நோயாளிகள் தடையை மீறி, வெளியே உலா வருகின்றனா்.

இதனால், வருவாய்த் துறையினா் அரியூா் முதன்மைச் சாலையிலிருந்து அனந்தபுரம் சாலை செல்லும் பகுதி வரை தடுப்புக் கட்டைகள் அமைத்து மூடியுனா்.

தொடா்ந்து, அங்கு அரசின் கரோனா கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றவும் அதிகாரிகள் எச்சரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.