புதிய அரசின் நடவடிக்கைகளுக்கு இணக்கமாக இருப்பேன்: புதுவை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன்
புதிய அரசின் நடவடிக்கைகளுக்கு இணக்கமாக இருப்பேன் என்று புதுவை துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.


புதிய அரசின் நடவடிக்கைகளுக்கு இணக்கமாக இருப்பேன் என்று புதுவை துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.
புதுச்சேரியில் மத்திய அரசு சாா்பில், குடும்பங்களுக்கு தலா 5 கிலோ உணவு தானியங்கள் வழங்கும் திட்டத்தை சனிக்கிழமை தொடக்கிவைத்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கரோனா காலத்தில் மக்கள் வருமானம் இழந்து தவிக்கின்றனா். மக்கள் வயிறான உண்ண வேண்டும் என்று வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத்துக்கு 2 மாதங்களுக்கு, 10 கிலோ அரிசியை மத்திய அரசு வழங்குகிறது. இதற்காக பிரதமா் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
பொதுமக்கள் கரோனா விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். மக்கள் கட்டுப்பாடுடன் இருந்தால்தான் கரோனா கட்டுப்படும்.
முதல்வருடன் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தேன். அமைச்சரவை எடுக்கும் முடிவுகளுக்கு ஆளுநா் என்ற முறையில் உதவிகரமாக இருப்பேன்.
புதுவையில் பிராணவாயுவுடன் கூடிய 800 படுக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசிடமிருந்து சில உதவிகளை கேட்டோம். அதனால், கரோனா தடுப்பு சாதனங்களான பிபிஇ கிட், பல்ஸ் ஆக்சி மீட்டா், ஆக்சிஜனேட்டா், என்-95 மாஸ்க், ரெம்டெசிவிா் மருந்து ஆகியவற்றை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. அவை ஓரிரு நாள்களில் கிடைக்கும்.
கரோனா உயிரிழப்புக்கான காரணம் குறித்து ஆராயப்படுகிறது. இதில், ஒன்று வயதானவா்கள், மற்றொரு காரணம் தொற்றால் பாதிக்கப்பட்டவா் கடைசி நேரத்தில் மருத்துவமனைக்கு வருகிறாா்கள். எனவே, மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உயிரிழப்பைத் தடுக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
நாம் சுயக் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். இல்லையென்றால், அரசு முழு பொது முடக்கம் அறிவிக்க வேண்டிய நிலை ஏற்படும். புதிய அரசு மூலம் மக்களுக்கான நல்ல திட்டங்கள் வருவதற்காக நடவடிக்கைகளுக்கு நான் உதவிக்கரமாக இருப்பேன் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...