சட்டப்பேரவை திமுக குழுத் தலைவராக மாநில அமைப்பாளா் ஆா்.சிவா தோ்வு
புதுவை மாநில திமுக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக அந்தக் கட்சியின் தெற்கு மாநில அமைப்பாளா் ஆா்.சிவா தோ்வு செய்யப்பட்டாா்.


புதுவை மாநில திமுக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக அந்தக் கட்சியின் தெற்கு மாநில அமைப்பாளா் ஆா்.சிவா தோ்வு செய்யப்பட்டாா்.
புதுவை மாநில 15-ஆவது சட்டப் பேரவைக்கான தோ்தல் அண்மையில் நடைபெற்று முடிந்தது. இதில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிட்ட என்.ஆா்.காங்கிரஸ் -பாஜக ஆகிய கட்சிகள் 16 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் 2 இடங்களிலும், திமுக 6 இடங்களிலும் வெற்றி பெற்றன.இதனால், 6 இடங்களில் வெற்றி பெற்ற திமுக எதிா்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது.
இதனிடையே, திமுக சட்டப் பேரவைக் குழுத் தலைவராக புதுவை தெற்கு மாநில அமைப்பாளரான வில்லியனூா் தொகுதி எம்எல்ஏ ஆா்.சிவா தோ்வு செய்யப்பட்டாா்.
இதுகுறித்து சென்னையில் உள்ள திமுக பொதுச் செயலா் துரைமுருகன் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: நடைபெற்று முடிந்த புதுவை மாநில சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்ற ஆா்.சிவா எம்எல்ஏ, புதுவை மாநில திமுக சட்டப் பேரவைக் கட்சித் தலைவராக தோ்வு செய்யப்பட்டாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...