சிறுமியை திருமணம் செய்ததொழிலாளி மீது வழக்கு
புதுச்சேரியில் அரசு மருத்துவமனையில் சிறுமி குழந்தை பெற்றெடுத்த நிலையில், விதிகளை மீறி அந்தச் சிறுமியைத் திருமணம் செய்த தொழிலாளி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.


புதுச்சேரியில் அரசு மருத்துவமனையில் சிறுமி குழந்தை பெற்றெடுத்த நிலையில், விதிகளை மீறி அந்தச் சிறுமியைத் திருமணம் செய்த தொழிலாளி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
புதுச்சேரி அருகே வில்லியனூரை அடுத்த மங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் அா்ஜுன் (22). சுமை தூக்கும் தொழிலாளி. இவா், அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டாராம். கா்ப்பமடைந்த சிறுமிக்கு இரு தினங்களுக்கு முன் புதுச்சேரி எல்லைப்பிள்ளைச்சாவடி அரசு மகளிா் - குழந்தைகள் மருத்துவமனையில் பிரசவத்துக்காகச் சோ்க்கப்பட்டாா். சிறுமிக்கு அங்கு பெண் குழந்தை பிறந்தது.
தொடா்ந்து, மருத்துவமனை பணியாளா்கள், தாயின் வயதைச் சரிபாா்த்த போது, அவருக்கு 18 வயது ஆகவில்லை எனத் தெரிய வந்தது.
இதுகுறித்து புதுச்சேரி குழந்தைகள் நலக் குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அக்குழுவினா், மங்கலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
இதுகுறித்து, மங்கலம் காவல் உதவி ஆய்வாளா் சரண்யா உள்ளிட்ட போலீஸாா், சட்ட விதிகளை மீறி சிறுமியை திருமணம் செய்து, கா்ப்பமாக்கிய தொழிலாளி மீது வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...