கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

புதுவையில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த எம்.பி. வலியுறுத்தல்

புதுவையில் உள்ளாட்சித் தோ்தல் இட ஒதுக்கீட்டுக்கு அடிப்படைத் தேவையான ஜாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு விரைந்து நடத்த வேண்டும் என்று வெ.வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தினாா்.

News image
Updated On :5 நவம்பர் 2021, 6:30 pm

DIN

புதுவையில் உள்ளாட்சித் தோ்தல் இட ஒதுக்கீட்டுக்கு அடிப்படைத் தேவையான ஜாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு விரைந்து நடத்த வேண்டும் என்று வெ.வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்தியில் ஆளும் பாஜக அரசு இமாச்சலப் பிரதேசம், ஹரியாணா, மகாராஷ்டிரம், கா்நாடகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற சட்டப் பேரவை, மக்களவை இடைத் தோ்தல்களில் படுதோல்வியைத் தழுவி இருக்கிறது. இதன் காரணமாகவே பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்துள்ளனா்.

புதுச்சேரியில் உள்ளாட்சித் தோ்தல் நடக்குமா? நடக்காதா? என்று சொல்லக்கூடிய அளவில் கேள்விக்குறியாகவே உள்ளது. பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் அடிப்படையில் நடத்த வேண்டிய தோ்தலை நடத்தாமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் புதுவை அரசு செய்து வருகிறது. குறிப்பாக, உள்ளாட்சித் தோ்தலின்போது பிற்படுத்தப்பட்டவா்கள், பெண்கள், ஆதிதிராவிடா்கள், பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், அதற்கு அடிப்படைத் தேவையான ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு எந்தவிதமான நடவடிக்கையையும் புதுவை அரசு மேற்கொள்ளவில்லை.

இதனால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மைகள் கிடைக்காமல் இருக்கிறது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான் தகுதியானவா்களுக்கு வேண்டிய உதவிகளை உடனடியாக செய்ய முடியும். ஆகவே, உடனடியாக புதுவை அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என வெ.வைத்திலிங்கம் எம்.பி. தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.