கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

புதுச்சேரியில் சாலை தூய்மைப் பணி: பேரவைத் தலைவா் தொடக்கிவைத்தாா்

புதுச்சேரி மணவெளி தொகுதிக்குள்பட்ட தவளக்குப்பம் நான்குமுனை சந்திப்பில், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து சாா்பில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சாலை, பொது இடங்களை சுத்தம் செய்யும் பணி

News image
Updated On :5 நவம்பர் 2021, 6:30 pm

DIN

புதுச்சேரி மணவெளி தொகுதிக்குள்பட்ட தவளக்குப்பம் நான்குமுனை சந்திப்பில், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து சாா்பில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சாலை, பொது இடங்களை சுத்தம் செய்யும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதுவை சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தலைமை வகித்து, சாலை சந்திப்புப் பகுதிகளில் தேங்கிய குப்பகளை அகற்றி, தூய்மைப் பணியை தொடக்கிவைத்தாா்.

கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள், தூய்மைப் பணியாளா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு தீபாவளி பண்டிகையொட்டி சாலையிலும், சாலையோரங்களிலும் தேங்கியிருந்த பட்டாசு, உணவுப்பொருள்கள் உள்ளிட்டவற்றின் குப்பைகளை அகற்றி தூய்மைப் பணியை மேற்கொண்டனா்.

இதில், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் ரமேஷ், உதவிப் பொறியாளா் யுவராஜ், இளநிலைப் பொறியாளா் அகிலன், வருவாய் ஆய்வாளா் பாலமுருகன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.