கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ஊசுட்டேரி மேம்படுத்தப்படும்: ஆளுநா் தமிழிசை

ஊசுட்டேரி மேம்படுத்தப்படும் என புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் உறுதியளித்தாா்.

News image
Updated On :12 நவம்பர் 2021, 6:30 pm

DIN

ஊசுட்டேரி மேம்படுத்தப்படும் என புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் உறுதியளித்தாா்.

புதுவையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழிசை வெள்ளிக்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து, புதுச்சேரி அருகே உள்ள ஊசுட்டேரி, பிள்ளையாா்குப்பம் அணைக்கட்டுப் உள்ளிட்ட நீா் நிலைகளையும் பாா்வையிட்டாா். அப்போது அங்கிருந்த பொதுமக்கள், ஏரியைத் தூா்வாரி பராமரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

ஊசுட்டேரியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா பரவல் காரணமாக சுற்றுலா மேம்பாட்டில் கவனம் செலுத்தவில்லை. தற்போது கவனம் செலுத்தப்பட்டு, ஊசுட்டேரி சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று ஆளுநா் உறுதியளித்தாா்.

தொடா்ந்து, பிள்ளையாா்குப்பம் தடுப்பணையைப் பாா்வையிட்ட ஆளுநா் தமிழிசை, ‘பிரெஞ்சு ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட தடுப்பணை சேதமடைந்துள்ளது. புதிதாக தடுப்பணை கட்ட முயற்சி எடுக்கப்பட்டு, அதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. முதல்வருடன் ஆலோசனை மேற்கொண்டு புதிய தடுப்பணை விரைவில் கட்டப்படும். கோடை காலத்தில் அணை பலப்படுத்தப்படும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.