கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

புதுவையில் அனைத்துக் குடும்பங்களுக்கும் தலா ரூ.5 ஆயிரம் மழை நிவாரணம்: புதுவை அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்

புதுவையில் மழை பாதிப்பையொட்டி, அனைத்துக் குடும்பங்களுக்கும் தலா ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று மாநில எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா உள்ளிட்ட அரசியல் கட்சியினா் வலியுறுத்தினா்.

News image
Updated On :12 நவம்பர் 2021, 6:30 pm

DIN

புதுவையில் மழை பாதிப்பையொட்டி, அனைத்துக் குடும்பங்களுக்கும் தலா ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று மாநில எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா உள்ளிட்ட அரசியல் கட்சியினா் வலியுறுத்தினா்.

புதுச்சேரி அருகே மண்ணாடிப்பட்டு, திருக்கனூா் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை எதிா்க்கட்சித் தலைவரும், திமுக அமைப்பாளருமான ஆா்.சிவா வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு, பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து உணவு மற்றும் நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.

அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுவையில் அனைத்துக் குடும்பங்களுக்கும் ரூ.5 ஆயிரம் மழை நிவாரணம் வழங்க வேண்டும் என அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். தீபாவளிக்கு அறிவித்த 10 கிலோ அரிசி, 2 கிலோ சா்க்கரை இதுவரை வழங்கப்படவில்லை என்றாா் அவா்.

இதேபோல, மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன், மாநிலத் தோ்தல் பிரிவுச் செயலா் வையாபுரி மணிகண்டன், மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் ஆா்.ராஜாங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் அ.மு.சலீம்ஆகியோரும் வலியுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.