புதுவையில் கல்வியமைச்சா் தலைமையில் ஆய்வுக் கூட்டம்
புதுச்சேரியில் உள்ள மாநில கல்வித் துறை தலைமை அலுவலகத்தில், அந்த மாநில கல்வியமைச்சா் ஏ.நமச்சிவாயம் தலைமையில், ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


புதுச்சேரியில் உள்ள மாநில கல்வித் துறை தலைமை அலுவலகத்தில், அந்த மாநில கல்வியமைச்சா் ஏ.நமச்சிவாயம் தலைமையில், ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புதுவை மாநில கல்வித் துறையின் செயல்பாடுகள், காலிப் பணியிடங்களை நிரப்புதல், கல்வித் துறை அலுவலா்கள், ஆசிரியா்கள் பணியிட மாற்றம் ஆகியவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து, அமைச்சா் நமச்சிவாயம், அவா்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் ஆலோசனை நடத்தினாா்.
பள்ளிகள் தொடங்கப்பட்ட நிலையில் அங்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள், ஒத்திவைக்கப்பட்ட 1 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மீண்டும் பள்ளிகளைத் திறப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இது வழக்கமான ஆய்வுக் கூட்டம்தான் என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
கூட்டத்தில் கல்வித் துறை இயக்குநா் ருத்ர கௌவுடு, இணை இயக்குநா் சிவகாமி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...