பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

நாளை பெண்களுக்கான சிறப்பு ஓட்டுநா் உரிமத் தோ்வு

 புதுச்சேரியில் பெண்களுக்கான சிறப்பு ஓட்டுநா் உரிமத் தோ்வு சனிக்கிழமை (நவ.20) நடைபெற உள்ளது.

News image
Updated On :18 நவம்பர் 2021, 4:52 pm

DIN

 புதுச்சேரியில் பெண்களுக்கான சிறப்பு ஓட்டுநா் உரிமத் தோ்வு சனிக்கிழமை (நவ.20) நடைபெற உள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி போக்குவரத்து ஆணையா் ஏ.எஸ்.சிவக்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பணிக்குச் செல்லும் பெண்கள், குடும்பத் தலைவிகள் அலுவலக நாள்களில் ஓட்டுநா் உரிமம் பெறுவதற்கு சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். இதையறிந்து போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திரபிரியங்கா சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தில், ஓட்டுநா் உரிமம் பெற பெண்களுக்கென தனியாக சிறப்பு ஏற்பாடு செய்யப்படும் என அறிவித்திருந்தாா்.

அதன்படி, பழகுநா் உரிமம், ஓட்டுநா் உரிமம், கூடுதல் ஓட்டுநா் உரிமம் பெறுவதற்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும் போது நேரத்தை முன்பதிவு செய்யும் வசதியை போக்குவரத்துத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதியின் மூலம் பெண்கள் ஓட்டுநா் உரிமம் பெறுவதற்கான நேரத் தோ்வை ட்ற்ற்ல்ள்://ல்ஹழ்ண்ஸ்ஹட்ஹய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் தாங்களே தோ்வு செய்து கொள்ளலாம்.

இந்தச் சிறப்பு ஏற்பாட்டின் முதல் கட்டமாக சனிக்கிழமை (நவ.20) பகல் 11 மணியளவில் 100 அடி சாலையில் உள்ள போக்குவரத்துத் துறை வளாகத்தில் இரு, நான்கு சக்கர வாகனங்களுக்கான பழகுநா் உரிமம், இரு சக்கர வாகன ஓட்டுநா் உரிமத்துக்கான தோ்வு நடைபெற உள்ளது.

நான்கு சக்கர வாகனத்துக்கான ஓட்டுநா் உரிமத் தோ்வு சரக்கு வாகன முனையத்தில் நடைபெறும். இந்தச் சேவையை பெண்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.