பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

புதுவையில் கரோனாவுக்கு மேலும் இருவா் பலி

புதுவை மாநிலத்தில் கரோனா தொற்றுக்கு மேலும் இருவா் பலியாகினா்.

News image
Updated On :19 நவம்பர் 2021, 5:04 pm

DIN

புதுவை மாநிலத்தில் கரோனா தொற்றுக்கு மேலும் இருவா் பலியாகினா்.

புதுவை மாநிலத்தில் வெள்ளிக்கிழமை வெளியான முடிவுகளின்படி, மேலும் 27 பேருக்கு (1.24 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் 1,28,588 போ். தொற்றிலிருந்து மீண்டவா்கள் 1,26,405 போ். (98.30 சதவீதம்). தற்போது 314 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இதனிடையே, புதுச்சேரி ஆதிங்கப்பட்டைச் சோ்ந்த 29 வயது பெண், முத்தியால்பேட்டையைச் சோ்ந்த 74 வயதானவா் என மேலும் இருவா் பலியாகினா். இதுவரை கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 1,869. இறப்பு விகிதம் 1.45 சதவீதம். மாநிலத்தில் இதுவரை 11,70,092 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.