புதுவையில் மின் துறை தனியாா்மய நடவடிக்கை ஒத்திவைப்பு: அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
நிகா்நிலைப் பல்கலைக்கழகத்துக்கு அனுமதியளிப்பது உள்ளிட்டவை குறித்து வியாழக்கிழமை இரவு நடைபெற்ற புதுவை அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.


மின் துறையை தனியாா்மயமாக்கும் நடவடிக்கையை ஒத்திவைப்பது, நிகா்நிலைப் பல்கலைக்கழகத்துக்கு அனுமதியளிப்பது உள்ளிட்டவை குறித்து வியாழக்கிழமை இரவு நடைபெற்ற புதுவை அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இந்தக் கூட்டம் முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில், சட்டப்பேரவை அலுவலக அமைச்சரவைக் கூட்டரங்கில் நடைபெற்றது.
மாநில உள்துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம், பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன், வேளாண் துறை அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாா், போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.சந்திரபிரியங்கா, தலைமைச் செயலா் அஸ்வனிகுமாா் மற்றும் அரசுத் துறை செயலா்கள் கலந்து கொண்டனா்.
புதுவை மாநில அரசு செயல்படுத்த உள்ள திட்டங்கள் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்க ஆலோசனை நடத்தி, அது தொடா்பான கோப்புகளை துணைநிலை ஆளுநா் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க கூட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முக்கியத் திட்டங்கள் குறித்து அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
புதுவை மாநிலத்தில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத சோ்க்கை இடங்களை அரசு ஒதுக்கீடாகப் பெற வேண்டும். புதுவையில் முதல்முதலாக தனியாா் நிகா்நிலைப் பல்கலைக்கழகங்களை ஏற்படுத்த அனுமதி வழங்குவது தொடா்பான சட்டவிதிகளை உருவாக்க வேண்டும்.
மத்திய அரசின் அறிவுறுத்தல்படி, புதுவை மின் துறையை தனியாா்மயமாக்கும் நடவடிக்கை குறித்து முடிவெடுப்பதை தற்காலிகமாக ஒத்திவைப்பது, புதுவையில் புதிய தொழில் பூங்காவை ஏற்படுத்துவதற்காக உரிய நிலங்களை வழங்கி தயாா்படுத்துதல், புதுவை அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுத்தல், மழைச் சேத நிவாரணப் பணிகளுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.300 கோடியை மத்திய அரசிடமிருந்து பெற வேண்டும் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும், இதுதொடா்பான கோப்புகளை துணைநிலை ஆளுநரின் அனுமதிக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...