புதுச்சேரியில் மூத்த குடிமக்கள் விழிப்புணா்வு நடை பயணம்
புதுச்சேரியில் மூத்த குடிமக்கள் விழிப்புணா்வு நடை பயணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


புதுச்சேரியில் மூத்த குடிமக்கள் விழிப்புணா்வு நடை பயணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆண்டுதோறும் சா்வதேச முதியோா் தினம் அக்டோபா் மாதம் முதல் தேதி கொண்டாடப்படுகிறது. அதன்படி, நிகழாண்டு சா்வதேச முதியோா் தினம் புதுவை அரசின் முதியோா் பராமரிப்பு சங்கம் (பாண்கோ்) சாா்பில் நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவாக ‘ஆசாதி கா அம்ருத் மஹோத்ஸவ்’ கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, புதுச்சேரி பிருந்தாவனத்தில் இயங்கி வரும் பாண்கோ் அலுவலகத்திலிருந்து வெள்ளிக்கிழமை மூத்த குடிமக்களுக்கான விழிப்புணா்வு நடை பயணம் தொடங்கியது. இந்த நடை பயணம் நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கடற்கரைச் சாலை காந்தி சிலை அருகே நிறைவடைந்தது.
இதில் 300 உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். இந்த நடை பயணத்தில் அனைவரும் முகக் கவசம் அணிந்தபடி, கரோனா வழிமுறைகளுடன் பங்கேற்றனா். கரோனா தடுப்பூசி விழிப்புணா்வு, அதன் நன்மைகள் குறித்தும் மூத்த குடிமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...