ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

சிறுமி மீதான பாலியல் வழக்கு: கிரிக்கெட் பயிற்சியாளா் கைது

 புதுச்சேரியில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட புகாரில் தொடா்புடைய கிரிக்கெட் பயிற்சியாளரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :23 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

 புதுச்சேரியில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட புகாரில் தொடா்புடைய கிரிக்கெட் பயிற்சியாளரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

இதுதொடா்பான புகாரின் பேரில், புதுச்சேரியைச் சோ்ந்த கிரிக்கெட் பயிற்சியாளா்கள் தாமரைக்கண்ணன், ஜெயக்குமாா், கிரிக்கெட் சங்கத் தலைவா் தாமோதரன், அவரது மகன் ரோஹித், இணைச் செயலா் வெங்கட் ஆகிய 5 போ் மீது அண்மையில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவா்கள் ஐவரையும் தேடி வந்தனா்.

இந்த நிலையில், தாமரைக்கண்ணன் புதுச்சேரி அருகே பத்துக்கண்ணு பகுதியில் உள்ள அவரது உறவினா் வீட்டில் இருந்ததைக் கண்டறிந்த மேட்டுப்பாளையம் காவல் உதவி ஆய்வாளா் சிவக்குமாா் தலைமையிலான போலீஸாா், அவரை சனிக்கிழமை கைது செய்தனா்.

அவரிடம் விசாரணை நடத்திய போலீஸாா், பின்னா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனா். இந்த வழக்கில் தலைமைறைவாக உள்ள திரைப்பட இயக்குநா் ஷங்கரின் சம்மந்தி தாமோதரன், அவரது மருமகன் ரோஹித் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.