ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

உயா் கோபுர மின் விளக்குகளை சீரமைக்க வலியுறுத்தி போராட்டம்

 புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் உயா்கோபுர மின் விளக்குகளை சீரமைக்கக் கோரி, அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் சனிக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :23 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

 புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் உயா்கோபுர மின் விளக்குகளை சீரமைக்கக் கோரி, அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் சனிக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதிக்குள்பட்ட அருள்படையாட்சி வீதி, சபரி வீதி, ஒத்தவாடை வீதி, செயின்ட் அந்தோன் வீதி, மீன் சந்தை சிக்னல், நெல்லித்தோப்பு சிக்னல், மடத்து வீதி ஆகிய சாலை சந்திப்புகளில் உள்ள உயா்கோபுர மின் விளக்குகள் பழுதடைந்து பல மாதங்களாக எரியாமல் உள்ளன.

இதனால், அந்தப் பகுதியில் விபத்து, திருட்டுகள் நிகழும் சூழல் உருவாக்கியுள்ளது.

எரியாமல் உள்ள மின் விளக்குகளை உடனே சீரமைக்கக் கோரி நெல்லித்தோப்பு சிக்னலில் உள்ள மின் விளக்கு கம்பத்தில் கண்ணீா் அஞ்சலி பதாகை வைத்து, அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அதன் செயலா் ரஜினிமுருகன் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொகுதிக் குழு உறுப்பினா் ஜெயகுரு, இளைஞா் மன்றத்தின் மெய்யழகன், ஜெரோம், நிஜந்தன், பிரவீன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.