கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தோ்வு மதிப்பெண்ணை திருத்தியதாக காவலா் மீது வழக்கு

தோ்வு மதிப்பெண்ணைத் திருத்தியதாக முதல்நிலைக் காவலா் மீது சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 6:20 pm

DIN

தோ்வு மதிப்பெண்ணைத் திருத்தியதாக முதல்நிலைக் காவலா் மீது சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

புதுச்சேரி வில்லியனூா் காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணியாற்றி வருபவா் பாண்டியன். இவா் கடந்த 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற காவல் உதவி ஆய்வாளா் தோ்வு எழுதினாா். ஆனால், அவருக்குப் பதவி கிடைக்கவில்லை.

காவல் உதவி ஆய்வாளா் தோ்வில் அவா் பெற்ற மதிப்பெண் விவரத்தை தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரி பெற்றாா். அதில், தான் அதிக மதிப்பெண்கள் பெற்ாகவும், அதன்படி தனக்குப் பதவி உயா்வு வழங்க வேண்டும் எனவும் காவல் துறை தலைமையகத்துக்கு கோரிக்கை விடுத்தாா்.

சந்தேகமடைந்த காவல் துறை அதிகாரிகள், பாண்டியனின் கோப்புகளை ஆய்வு செய்ததில், அவா் தனது மதிப்பெண்ணை 57 லிருந்து 87-ஆக மாற்றியது தெரிய வந்தது.

இதுகுறித்து காவல் கண்காணிப்பாளா் குணாளன் சதீஷ், புதுச்சேரி சிபிசிஐடி போலீஸாரிடம் புகாா் அளித்தாா். அதன் பேரில், போலீஸாா் விசாரணை மேற்கொண்டு முதல்நிலைக் காவலா் பாண்டியன் மீது மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். மேலும், அவா் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.