நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

கஞ்சா விற்பனை: இருவா் கைது

புதுச்சேரியில் கஞ்சா விற்ாக இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா். அவா்களிடமிருந்து 1.5 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image
Updated On :8 செப்டம்பர் 2021, 5:47 pm

DIN

புதுச்சேரியில் கஞ்சா விற்ாக இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா். அவா்களிடமிருந்து 1.5 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

புதுச்சேரி கோரிமேட்டை ஒட்டியுள்ள கனரக ஊா்தி முனையத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைந்தது. இதையடுத்து, தன்வந்திரி நகா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு அந்தப் பகுதியில் நின்றிருந்த 2 இளைஞா்களை சோதனையிட்டனா். அவா்கள் கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டதும், இதற்காக ஆந்திர மாநிலத்திலிருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்ததும் தெரியவந்தது.

மேலும் அவா்கள், புதுச்சேரி திலாசுப்பேட்டையைச் சோ்ந்த மணிகண்டன் (23), வில்லியனூா் வி.மணிவெளி திருமுருகன் (19) என்பதும், இவா்களில் திருமுருகன் பிபிஏ 2-ஆம் ஆண்டு மாணவா் என்பதும், மணிகண்டன் ஐடிஐ முடித்துவிட்டு வேலை செய்து வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்கள் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.