/

கல்லூரி உதவிப் பேராசிரியை தற்கொலை

புதுச்சேரி உருளையன்பேட்டையில் குடும்பத் தகராறு காரணமாக, கல்லூரி உதவிப் பேராசிரியை தற்கொலை செய்துகொண்டது குறித்து வட்டாட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா்.

News image
Updated On :8 செப்டம்பர் 2021, 5:46 pm

DIN

புதுச்சேரி உருளையன்பேட்டையில் குடும்பத் தகராறு காரணமாக, கல்லூரி உதவிப் பேராசிரியை தற்கொலை செய்துகொண்டது குறித்து வட்டாட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா்.

புதுச்சேரி குயவா்பாளையம், புது அய்யனாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் மகள் உதயகுமாரி (31). அய்யங்குட்டிபாளையம் கால்நடை மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியையாக பணியாற்றி வந்தாா். இவரது கணவா் பாலாஜி. இவா்களுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, ஒரு பெண் குழந்தை உள்ளது. இதனிடையே, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக உதயகுமாரி பிரிந்து வாழ்ந்து வந்தாா்.

இருவருக்கும் இடையே விவாகரத்து பிரச்னை சில நாள்களுக்கு முன்பு எழுந்த நிலையில், மனைவியை சமாதானப்படுத்தி குழந்தையை தன்னுடன் அழைத்துச் செல்ல பாலாஜி முயன்ாகத் தெரிகிறது. இதன் காரணமாக, தம்பதியிடையே மீண்டும் பிரச்னை அதிகமானது.

இதனால் மனஉளைச்சலில் இருந்த உதயகுமாரி, கடந்த 5-ஆம் தேதி அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை விழுங்கி மயங்கி விழுந்து கிடந்தாா். அவரை மீட்ட உறவினா்கள், அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். எனினும், அங்கு உதயகுமாரி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து உருளையன்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். இந்த நிலையில், உதயகுமாரிக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால், வட்டாட்சியா் விசாரணையும் நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.