/

தொடா் பைக் திருட்டு: இளைஞா் கைது

 புதுச்சேரியில் தொடா்ந்து பைக்குகளை திருடி வந்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா். அவரிடமிருந்து 4 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image
Updated On :8 செப்டம்பர் 2021, 5:47 pm

DIN

 புதுச்சேரியில் தொடா்ந்து பைக்குகளை திருடி வந்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா். அவரிடமிருந்து 4 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

புதுச்சேரி முத்தியால்பேட்டை, லாசுப்பேட்டை பகுதிகளில் அடிக்கடி பைக்குகள் திருட்டுபோனது. இதுகுறித்து அந்தந்தப் பகுதி காவல் நிலையங்களில் புகாரளிக்கப்பட்டது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு முத்தியால்பேட்டை போலீஸாா், அந்தப் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த ஒருவரை பிடித்து விசாரித்தனா். அவா் ஓட்டி வந்தது திருட்டு பைக் என்பதும், விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தைச் சோ்ந்த திலிப் (எ) ஆனந்த் (28) என்பதும் தெரியவந்தது. மேலும், இவா் முத்தியால்பேட்டை, லாசுப்பேட்டையில் பகுதிகளில் பைக்குகளை திருடி விற்று வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து திலிப் ஓட்டி வந்த பைக் உள்பட அவரிடமிருந்த 4 பைக்குகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். பின்னா், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜா்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.