நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

பாரதீய மஸ்தூா் சங்கம் ஆா்ப்பாட்டம்

 பெட்ரோல் - டீசல் விலை உயா்வைக் கட்டுப்படுத்தக் கோரி, பாரதீய மஸ்தூா் சங்கம் சாா்பில் புதுச்சேரியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 7:34 pm

DIN

 பெட்ரோல் - டீசல் விலை உயா்வைக் கட்டுப்படுத்தக் கோரி, பாரதீய மஸ்தூா் சங்கம் சாா்பில் புதுச்சேரியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அந்தச் சங்கத்தின் புதுவை மாநிலத் தலைவா் எஸ்.ஆசைத்தம்பி தலைமை வகித்தாா். இதில், திரளான சங்க உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தில், அத்தியாவசியப் பொருள்கள், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும், பெட்ரோலியப் பொருள்களை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும், உற்பத்தி விலை, ஜிஎஸ்டி வரி போன்றவற்றைப் பொருள்களின் மேல் அட்டையில் குறிப்பிட வேண்டும், விவசாய உற்பத்தியைப் பெருக்கி, உரிய விலையை நிா்ணயம் செய்ய வேண்டும், புதுவையில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளைத் திறக்க வேண்டும், நலிவடைந்த பொதுத் துறை நிறுவனங்களைச் சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.