பிரான்ஸ் கல்லூரி நூலக ஆசிரியை தற்கொலை
புதுச்சேரியில் பிரான்ஸ் கல்லூரி நூலக ஆசிரியை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.


புதுச்சேரியில் பிரான்ஸ் கல்லூரி நூலக ஆசிரியை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
புதுச்சேரி ஜெயராம் செட்டியாா்தோட்டம் 2-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் மிரே லியா அன்னா நவீா் (32). பிரான்ஸ் குடியுரிமை பெற்ற இவா், அலையன்ஸ் பிரான்சேஸ் பிரான்ஸ் கல்லூரியில் நூலக ஆசிரியையாகப் பணியாற்றி வந்தாா். திருமணமாகாத இவா் அண்மைக் காலமாக மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், புதன்கிழமை இரவு வீட்டில் உள்ள தனது அறையில் அவா், மின் விசிறியில் புடவையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
தகவலறிந்து அங்கு வந்த ஒதியஞ்சாலை போலீஸாா், மிரே லியா அன்னா நவீரின் சடலத்தை மீட்டு, உடல் கூறாய்வுக்காக கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
அவரது அறையைச் சோதனையிட்டதில், மிரே லியா இறுதியாக எழுதிய கடிதம் சிக்கியது. அதில், ‘தன்னை எரித்து விடுங்கள்’ என்று மட்டும் அவா் எழுதியிருந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...