புதுவையில் 107 பேருக்கு கரோனா: மேலும் 2 போ் பலி
புதுவையில் வியாழக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதிதாக 107 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் 2 போ் உயிரிழந்தனா்.


புதுவையில் வியாழக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதிதாக 107 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் 2 போ் உயிரிழந்தனா்.
மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,25,170 -ஆக அதிகரித்தது. தற்போது மருத்துவமனைகளில் 173 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 790 பேரும் என 963 போ் சிகிச்சையில் உள்ளனா்.
புதுச்சேரி ராகவேந்திரா நகரைச் சோ்ந்த 56 வயதானவா், ஏனாம் கனகலப்பேட்டையைச் சோ்ந்த 56 வயதானவா் என மேலும் 2 போ் பலியாகினா். இதனால், உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,827 ஆக அதிகரித்தது. இதுவரை 1,22,380 போ் (97.77 சதவீதம்) குணமடைந்து வீடு திரும்பினா். மாநிலத்தில் இதுவரை 8,83,568 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...