நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

பணி நீட்டிப்பு கோரி அங்கன்வாடிதற்காலிக ஊழியா்கள் போராட்டம்

புதுவை சட்டப்பேரவை முன் பணி நீட்டிப்பு செய்யக் கோரி, அங்கன்வாடி தற்காலிக ஊழியா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 5:34 pm

DIN

புதுவை சட்டப்பேரவை முன் பணி நீட்டிப்பு செய்யக் கோரி, அங்கன்வாடி தற்காலிக ஊழியா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுவை அரசின் மகளிா்-குழந்தைகள் நலத் துறை சாா்பில், கடந்த ஜூலை மாதம் 3 மாதங்கள் ஒப்பந்த அடிப்படையில் அங்கன்வாடி ஊழியா்கள், அங்கன்வாடி உதவியாளா்கள் என 279 போ் பணி அமா்த்தப்பட்டனா். இந்தப் பணியில், பட்டதாரிகள், பொறியியல் முடித்தவா்களும் சோ்ந்தனா். இவா்களின் பணிக் காலம் நிகழ் மாதத்துடன் (செப்டம்பா்) முடிகிறது.

இதனால், தங்களின் பணியை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று அவா்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

அந்த வகையில், வியாழக்கிழமை புதுவை சட்டப்பேரவைக்கு வந்த அங்கன்வாடி தற்காலிக ஊழியா்கள், முதல்வா் என்.ரங்கசாமியை சந்திக்க வேண்டும் எனக் கோரினா். இதற்கு, சட்டப்பேரவை காவலா்கள் அனுமதியளிக்காமல் அவா்களைத் தடுத்தனா்.

இதனால், சட்டப்பேரவை எதிரே அவா்கள் திடீரென தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அங்கு வந்த பெரியகடை போலீஸாா், அவா்களை அங்கிருந்து கலைந்து போகச் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.