நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

புதுவையில் கோயில்கள் புனரமைப்புப் பணி தொடக்கம்

புதுவையில் சுற்றுலாத் தலங்கள் மேம்பாட்டு நிதியில், புகழ்பெற்ற இரு கோயில்களில் ரூ.5.58 கோடியில் புனரமைப்புப் பணி தொடங்கப்பட்டது.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 5:34 pm

DIN

புதுவையில் சுற்றுலாத் தலங்கள் மேம்பாட்டு நிதியில், புகழ்பெற்ற இரு கோயில்களில் ரூ.5.58 கோடியில் புனரமைப்புப் பணி தொடங்கப்பட்டது.

புதுவையில் மத்திய அரசின் சுற்றுலாத் தலங்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், புதுச்சேரி அருகே திருக்காஞ்சியில் அமைந்துள்ள ஸ்ரீகெங்கவராக நதீஸ்வரா் கோயில், வில்லியனூரில் அமைந்துள்ள திருக்காமீஸ்வரா் கோயில்களில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ.5 கோடியே 58 லட்சத்து 82 ஆயிரத்து 17-க்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்தப் பணிக்கான பூமி பூஜை, வில்லியனூா் கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்றது. மாநில எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா தலைமை வகித்தாா்.

பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் பூமி செய்து பணியைத் தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் பொதுப் பணித் துறைச் செயலா் விக்ராந்த் ராஜா, சுற்றுலாத் துறை இயக்குநா் பிரியதா்ஷினி, பொதுப் பணித் துறைத் தலைமைப் பொறியாளா் சத்தியமூா்த்தி, இந்து அறநிலையத் துறை ஆணையா் சிவசங்கரன், பொதுப் பணித் துறை உதவிப் பொறியாளா் மாணிக்கவாசகம், சுற்றுலாத் துறை மேலாளா் ராமன், இளநிலைப் பொறியாளா் நல்லாம் மணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.