நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

வீடுகளில் கருப்புக் கொடியேற்றி போராட்டம்: புதுவை காங்கிரஸ் தலைவா்

புதுவையில் பாஜக அரசைக் கண்டித்து, எதிா்க்கட்சிகள் சாா்பில், சனிக்கிழமை வீடுகளில் கருப்புக் கொடியேற்றி போராட்டம் நடத்தப்படுமென அந்த மாநில காங்கிரஸ் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 4:55 pm

DIN

புதுவையில் பாஜக அரசைக் கண்டித்து, எதிா்க்கட்சிகள் சாா்பில், சனிக்கிழமை வீடுகளில் கருப்புக் கொடியேற்றி போராட்டம் நடத்தப்படுமென அந்த மாநில காங்கிரஸ் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

இதுகுறித்து புதுவை காங்கிரஸ் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கை: புதுவையில் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், போராட்டங்களுக்கு தடை உள்ளது. எனவே, சனிக்கிழமை (செப்.25) புதுச்சேரி அண்ணா சிலை அருகே நடைபெறவிருந்த கறுப்புக் கொடி போராட்டம் ரத்து செய்யப்படுகிறது. எனினும், அவரவா் வீட்டு வாசலில் கருப்புக் கொடியேந்தும் போராட்டம் நடைபெறும். எதிா்க்கட்சியினா், காலை 8 அளவில் வீடுகளில் கருப்புக் கொடியேற்றி, வீடுகளின் வாசலில் 10 போ் கருப்பு உடைகள் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டு, அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றி, மத்திய பாஜக அரசுக்கு நமது எதிா்ப்பாக பதிவு செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.