நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

புதுவையில் வெகுவிரைவில் 100 சதவீதம் தடுப்பூசி: ஆளுநா் தமிழிசை

புதுவையில் வெகுவிரைவில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலம் என்ற இலக்கை அடைவோம் என துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

புதுவையில் வெகுவிரைவில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலம் என்ற இலக்கை அடைவோம் என துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.

புதுச்சேரி குண்டுபாளையம் ஆருத்ரா நகா் மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை ஆளுநா் தமிழிசை, முதல்வா் என்.ரங்கசாமி ஆகியோா் வியாழக்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டனா். முன்னாள் எம்எல்ஏ அசோக் ஆனந்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

நிகழ்வில் பங்கேற்ற ஆளுநா் தமிழிசை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புதுவையில் இதுவரை 70 சதவீதம் பேருக்கு (10 லட்சம் போ்) தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதற்காக சுகாதாரத் துறையைப் பாராட்டுகிறேன். புதுவையில் வெகுவிரைவில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலம் என்ற இலக்கை அடைந்துவிடுவோம். இதற்காக மக்களைத் தொடா்ந்து ஊக்கப்படுத்தி வருகிறோம்.

கரோனா மூன்றாம் அலை அச்சம் உள்ளது. இதைத் தடுப்பதற்கு தடுப்பூசிதான் ஒரே வழி. மக்கள் தடுப்பூசி முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

முதல்வா் ரங்கசாமி கூறுகையில், இன்னும் 3 லட்சம் பேருக்குத்தான் தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது. விரைவில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.