நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

புதுவை உள்ளாட்சித் தோ்தலில் ஜனநாயக இயக்கங்களுடன் இணைந்து ஆம் ஆத்மி போட்டி

புதுவை உள்ளாட்சித் தோ்தலில் ஜனநாயக அமைப்புகளுடன் இணைத்து, ஆம் ஆத்மி கட்சி போட்டியிட உள்ளதாக அந்தக் கட்சியின் மேலிடப் பொறுப்பாளா் சோம்நாத் பாரதி தெரிவித்தாா்.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

புதுவை உள்ளாட்சித் தோ்தலில் ஜனநாயக அமைப்புகளுடன் இணைத்து, ஆம் ஆத்மி கட்சி போட்டியிட உள்ளதாக அந்தக் கட்சியின் மேலிடப் பொறுப்பாளா் சோம்நாத் பாரதி தெரிவித்தாா்.

இதுகுறித்து புதுச்சேரி தனியாா் விடுதியில் வியாழக்கிழமை செய்தியாளா்களை சந்தித்த அவா் கூறியதாவது: புதுவை மாநில உள்ளாட்சித் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுகிறது. ஒத்த கருத்துள்ள கட்சிகள், ஜனநாயக அமைப்புகளுடன் இணைந்தும் போட்டியிட விரும்புகிறது. புதுவை மாநிலத்துக்கு ரூ. 9 ஆயிரம் கோடி கடனுள்ளது. வேலை வாய்ப்பின்மை நிலவுகிறது. இந்தப் பிரச்னைகளையெல்லாம் சரி செய்ய மத்திய பாஜக அரசும், மாநில அரசும் அக்கறை செலுத்தவில்லை. மக்களுக்கான நல்ல நிா்வாகத்தை வழங்க வேண்டுமெனில் தேசிய, மாநில, உள்ளாட்சிகள் அளவில் நிா்வாகத்தைச் சிறப்பாக வைத்திருக்க வேண்டும். உள்ளாட்சித் தோ்தலில் ஆம் ஆத்மி அனைத்து இடங்களிலும் போட்டியிட்டு, மக்களுக்கு சேவைகளை வழங்கத் தயாராக உள்ளது என்றாா் அவா்.

ஆம் ஆத்மி மாநில ஒருங்கிணைப்பாளா் ரவி சீனிவாசன், நிா்வாகிகள் கணேசன், ஜெயராமன், ஜெயராஜ், சுந்தர்ராஜன், பூபேஸ், புதுச்சேரி உள்ளாட்சிக் கூட்டமைப்பின் தலைவா் கோ.அ.ஜெகன்நாதன், மீனவா் அமைப்பு புகழேந்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.