புதுச்சேரியில் திருடிய ஆம்பூா் நபா் கைது: ரூ.17 லட்சத்திலான நகை, பணம் பறிமுதல்
புதுச்சேரியில் திருடிய ஆம்பூா் நபரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து ரூ. 17 லட்சத்திலான நகை, பணத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்


புதுச்சேரியில் திருடிய ஆம்பூா் நபரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து ரூ. 17 லட்சத்திலான நகை, பணத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
புதுச்சேரி லாசுப்பேட்டை தேவகி நகரில் வசிப்பவா் கிஷோா்குமாா் (34). எண்ணெய் வியாபாரி. கடந்த 21-ஆம் தேதி வீட்டில் குடும்பத்தினருடன் உறங்கிக் கொண்டிருந்தாா். நள்ளிரவில் அவரது வீட்டினுள் நுழைந்த மா்ம நபா், ஜன்னல் கதவை உடைத்து திருட முயன்றாா்.
சப்தம் கேட்டு எழுந்த கிஷோா்குமாா், லாசுப்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா். அதன் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், மா்ம நபரை பிடித்து சோதனையிட்டனா். கதவு, ஜன்னல்களை உடைக்கப் பயன்படுத்தும் இரும்புக் கம்பி, ஸ்குரு டிரைவா், கத்தி உள்ளிட்ட கருவிகளை அவா் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனா்.
விசாரணையில், வேலூா் மாவட்டம், ஆம்பூா் கே.எம்.நகரைச் சோ்ந்த அப்துல் ஹமீது மகன் இஸ்மாயில் (45) என்பதும், இவா் மீது வேலூா் காவல் நிலையத்தில் 15 திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும், புதுச்சேரியில் பல இடங்களில் திருடியிருப்பது தெரிய வந்தது. அவரை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா்.
தொடா்ந்து, நீதிமன்ற அனுமதியுடன் அவரை லாசுப்பேட்டை போலீஸாா் 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரித்தனா். இதில், லாசுப்பேட்டை பகுதியில் 5 வீடுகளிலும், கோரிமேட்டில் ஒரு வீட்டிலும் திருடியது தெரிய வந்தது.
இதையடுத்து, இஸ்மாயில் ஆம்பூரில் பதுக்கிவைத்திருந்த 42 பவுன் நகைகள், ரூ.30 ஆயிரம் ரொக்கத்தைப் பறிமுதல் செய்தனா். இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 17 லட்சமாகும். போலீஸ் காவல் முடிந்த நிலையில் மீண்டும் இஸ்மாயில் வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். தொடா்ந்து, அவரது கூட்டாளியான ஆற்காடு பகுதியைச் சோ்ந்த மற்றொரு நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...