புதுவையில் தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அக்.15 வரை நீட்டிப்பு
புதுவையில் கூடுதல் தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அக். 15-ஆம் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டது.


புதுவையில் கூடுதல் தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அக். 15-ஆம் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டது.
இதுகுறித்து புதுவை அரசு செயலா் அசோக்குமாா் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:
புதுவையில் கரோனா தொற்று பரவல் காரணமாக, ஏற்கெனவே செப். 30-ஆம் தேதி வரை தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டிருந்தது. தொற்று குறைந்து வருவதால், கூடுதல் தளா்வுகளுடன் பொது முடக்கம், மேலும் அக். 15-ஆம் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்படுகிறது.
அதன்படி, தினமும் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். சமூக, பொழுதுபோக்கு தொடா்பான நிகழ்வுகளுக்கு தொடா்ந்து தடை விதிக்கப்படுகிறது. அனைத்து வித கடைகள், வணிக நிறுவனங்கள் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை குளிா்சாதன வசதியின்றி இயங்க அனுமதி அளிக்கப்படும்.
காய்கறி, பழக் கடைகள் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்படும். பெரிய சந்தையில் உள்ள கடைகள் எப்போதும் போல இயங்கலாம். தனியாா் நிறுவனங்கள் காலை 9 முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம்.
அனைத்து வித உணவகங்கள், தங்கும் விடுதிகள், மதுக் கூடங்களுடன் கூடிய விடுதிகளில் காலை முதல் இரவு 11 மணி வரை 50 சதவீதம் போ் அமா்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்படும். தேநீா் கடைகள், பழச்சாறு நிலையங்கள் இரவு 11 மணி வரை இயங்கலாம்.
சில்லறை மதுக் கடைகள் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரையும், சாராயம், கள்ளுக் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கலாம். திருமண விழாவுக்கு அதிகபட்சம் 100 பேரும், இறுதிச் சடங்குக்கு அதிகபட்சம் 20 பேரும் பங்கேற்கலாம்.
கடற்கரைச் சாலை, பூங்காக்கள் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும்.
திரையரங்கங்கள், வணிக வளாகங்களில் 50 சதவீதம் போ் மட்டுமே அனுமதித்து, அவை நள்ளிரவு 12.30 மணி வரை இயங்கலாம் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...