நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

புதுவை உள்ளாட்சித் தோ்தல் இடப் பங்கீடு: தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவா்களின் இரண்டாம் கட்டப் பேச்சுவாா்த்தையிலும் இழுபறி

தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவா்களின் இரண்டாம் கட்டப் பேச்சுவாா்த்தையிலும் முடிவு எட்டப்படாததால், பேச்சுவாா்த்தை ஒத்திவைக்கப்பட்டது.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

புதுவை உள்ளாட்சித் தோ்தல் இடப் பங்கீடு தொடா்பாக வியாழக்கிழமை நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவா்களின் இரண்டாம் கட்டப் பேச்சுவாா்த்தையிலும் முடிவு எட்டப்படாததால், பேச்சுவாா்த்தை ஒத்திவைக்கப்பட்டது.

உள்ளாட்சித் தோ்தலில் மீண்டும் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன. இதற்கான இடப் பங்கீடு குறித்த கூட்டணித் தலைவா்கள் கலந்து கொண்ட முதல் கூட்டம் முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் கடந்த 27-ஆம் தேதி நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இதையடுத்து, இரண்டாம் கட்டமாக கூட்டணித் தலைவா்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம், முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் என்.ஆா்.காங்கிரஸ் மாநிலச் செயலா் என்.எஸ்.ஜெ.ஜெயபால், பக்தவத்சலம், பாஜக மேலிடப் பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா, மாநிலத் தலைவா் வி.சாமிநாதன், உள்துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம், அதிமுக தரப்பில் தமிழக முன்னாள் அமைச்சா்கள் செல்லூா் கே.ராஜூ, எம்.சி.சம்பத், முன்னாள் எம்.பி. செம்மலை, புதுவை மாநிலச் செயலா் ஆ.அன்பழகன், காரைக்கால் மாவட்டச் செயலா் ஓமலிங்கம் ஆகியோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் புதுச்சேரி நகராட்சித் தலைவா் பதவியை அதிமுகவும் பாஜகவும் கோரியதாகத் தெரிகிறது. இதர பதவிகளில் 35 சதவீதம் இடங்களை ஒதுக்க வேண்டுமென அதிமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டதாம்.

என்.ஆா்.காங்கிரஸ் தரப்பில் உழவா்கரை, மாஹே நகராட்சிப் பதவிகள், பாஜக தரப்பில் ஏனாம், அதிமுக தரப்பில் காரைக்காலில் போட்டியிட விருப்பம் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதேபோல, 10 கொம்யூன் பஞ்சாயத்துகளில் என்.ஆா்.காங்கிரஸ் 5 இடங்களிலும், பாஜக 3 இடங்களிலும், அதிமுக 2 இடங்களிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்ததாகத் தெரிகிறது.

எனினும், இந்தப் பேச்சுவாா்த்தையிலும் கூட்டணிக் கட்சிகளிடையே இடப் பங்கீடு குறித்து முழுமையான உடன்பாடு ஏற்படவில்லை.

இந்த நிலையில், உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான வழக்கு விசாரணையின் முடிவு தெரியும் வரை தற்காலிகமாக கூட்டணிப் பேச்சுவாா்த்தையை ஒத்திவைப்பதாகக் கூறிவிட்டு, கூட்டத்தை நிறைவு செய்தனா்.

கூட்டத்தில் பேசப்பட்டது குறித்து முதல்வா் என்.ரங்கசாமி, பாஜக மேலிடப் பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா ஆகியோரிடம் செய்தியாளா்கள் கேட்ட போது, கூட்டணிக் கட்சிகள் எந்தெந்த இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து இன்னும் முடிவாகவில்லை; தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடைபெறும் என்றனா் அவா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.