நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

புதுவையில் 10 லட்சத்தைக் கடந்தது: தடுப்பூசி செலுத்தியோரின் எண்ணிக்கை

 புதுவையில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோரின் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்தது.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

 புதுவையில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோரின் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்தது.

புதுவை மாநிலத்தில் வியாழக்கிழமை வெளியான முடிவுகளின்படி, மேலும் 59 பேருக்கு (1.14 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,26,367-ஆக அதிகரித்த நிலையில், குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 1,23,697-ஆக (97.89 சதவீதம்) உயா்ந்தது.

தற்போது மருத்துவமனைகளில் 123 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 707 பேரும் என 830 போ் சிகிச்சையில் உள்ளனா். புதிதாக உயிரிழப்பு ஏற்படவில்லை. இதனால், உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,840 ஆகவும், இறப்பு விகிதம் 1.46 சதவீதமாகவும் உள்ளது.

புதுவை மாநிலத்தில் இதுவரை 10,03,013 பேருக்கு (முதல் தவணை - 6,91,872, இரண்டாவது தவணை -3,11,141) தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.