புதுவையில் முழு அடைப்பு: கடைகள் மூடல்

புதுவையில் எதிர்க்கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. 
புதுவையில் முழு அடைப்பு காரணமாக மூடப்பட்ட கடைகள்.
புதுவையில் முழு அடைப்பு காரணமாக மூடப்பட்ட கடைகள்.

புதுவையில் எதிர்க்கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

புதுவை மாநில உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு குளறுபடிகளை சரி செய்ய வலியுறுத்தியும், விதிகளை மீறி தன்னிச்சையாக செயல்படும் மாநில தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், இதற்கு காரணமான புதுவை என். ஆர். காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசைக் கண்டித்தும், புதுவை காங்கிரஸ், திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் திங்கள்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

முழு அடைப்பு போராட்டத்தால் காலியாக உள்ள புதுச்சேரி பேருந்து நிலையம்.

அதன்படி எதிர்க்கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. முழு அடைப்பு காரணமாக புதுவையில் தனியார் பேருந்துகள், ஆட்டோ, டெம்போக்கள் இயங்கவில்லை. தமிழக மற்றும் புதுச்சேரி அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. புதுவை முழுவதும் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. எதிர்க்கட்சிகள் திடீர் போராட்டம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

முக்கிய சாலை சந்திப்புகளில், பேருந்து நிலையங்களில் போலீசார் குவிக்கப்பட்டும், பாதுகாப்புடனும் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com