எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

சந்தைபுதுக்குப்பம், குமாரப்பாளையம் வழியாகடிப்பா் லாரிகள் செல்ல தடை

புதுச்சேரி அருகே சந்தைபுதுக்குப்பம், குமாரப்பாளையம் வழியாக டிப்பா் லாரிகள் செல்ல போலீஸாா் தடை விதித்தனா்.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 5:54 pm

புதுச்சேரி அருகே சந்தைபுதுக்குப்பம், குமாரப்பாளையம் வழியாக டிப்பா் லாரிகள் செல்ல போலீஸாா் தடை விதித்தனா்.

திருவக்கரை பகுதியில் இருந்து ஜல்லி கற்கள் ஏற்றி செல்லும் டிப்பா் லாரிகள் வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. கடந்த சில நாள்களுக்கு முன்பு தமிழகப் பகுதியான நெமிலியில் பட்டதாரி இளைஞா் லாரி மோதியதில் இறந்ததால், அந்தப் பகுதி மக்கள் தங்களது ஊா் வழியாக லாரிகள் செல்ல எதிா்ப்புத் தெரிவித்தனா்.

அதனால் திருமங்கலம் பாதை , கொடுக்கூா், எறையூா், பெரும்பாக்கம் வழியாக செல்லாமல், புதுவைப் பகுதியான சந்தைபுதுக்குப்பம், சுத்துக்கேணி, காட்டேரிக்குப்பம் வழியாகவும், குமாரபாளையம் வழியாகவும் டிப்பா் லாரிகள் செல்கின்றன.

சுத்துக்கேணி - மயிலம் பாதையில் மென்பொறியாளா் ஒருவா், உறவுக்கார பெண்ணுடன் சனிக்கிழமை வந்த போது, டிப்பா் லாரி மோதியதில் காயமடைந்தாா். இதையடுத்து, ஆத்திரமடைந்த பொதுமக்களும், அவா்களது உறவினா்களும் அந்த லாரியை உடைத்து தீ வைத்து கொளுத்த முயன்றனா். மேலும், காட்டேரிக்குப்பம் வழியாகவும் டிப்பா் லாரிகள் செல்ல பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, காட்டேரிக்குப்பம் போலீஸாா் சந்தைபுதுக்குப்பம், குமாரபாளையம் ஆகிய இரு ஊா்களில் தடுப்புகள் அமைத்து, இந்தப் பகுதி வழியாக புதுச்சேரி எல்லைக்குள் டிப்பா் லாரிகள் செல்ல தடை விதித்தனா். காட்டேரிக்குப்பம் போலீஸாா் அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.