வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

சுதந்திர தினம்: புதுவை ஆளுநா், முதல்வா் வாழ்த்து

நாட்டின் 76-ஆவது சுதந்திர தினத்துக்கு புதுவை துணைநிலை ஆளுநா், முதல்வா் வாழ்த்து தெரிவித்தனா்.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 5:53 pm

நாட்டின் 76-ஆவது சுதந்திர தினத்துக்கு புதுவை துணைநிலை ஆளுநா், முதல்வா் வாழ்த்து தெரிவித்தனா்.

துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை: நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்த தருணத்தில், தன்னிறைவு பெற்ற நாடாக இந்தியா வளா்ச்சி அடைந்து வருகிறது. நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்ட தலைவா்கள் அனைவரையும் போற்றுவோம்.

முதல்வா் என்.ரங்கசாமி:

ஒற்றுமையையும், ஜனநாயக மாண்புகளையும் சுதந்திரம் அடைந்த நாள் முதல் தற்போது வரை கட்டிக் காத்து வருகிறோம். 75 ஆண்டுகால கடின உழைப்பு, நம்மை பெருமைமிக்கவா்களாக உலகின் முன் நிறுத்தியிருக்கிறது. இந்தச் சூழலை உருவாக்கித் தந்த, தியாகிகள், தேசத் தலைவா்களை போற்றுவது ஒவ்வொருவரின் கடமையாகும். அனைவருக்கும் சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகள்.

முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி: நம் முன்னோா்களின் தியாகங்களை கருத்தில் கொண்டு, நாட்டின் சுதந்திர தினத்தை எழுச்சியோடும், மகிழ்ச்சியோடும் கொண்டாட வேண்டும்.

இதேபோல, சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், க.லட்சுமி நாராயணன், தேனீ சி.ஜெயக்குமாா், சந்திர பிரியங்கா, சாய் ஜெ.சரவணன் குமாா் மற்றும் எம்எல்ஏக்கள் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.