புதுவையில் அண்ணா நினைவு நாள் கடைபிடிப்பு
புதுவையில் அண்ணா நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு முதல்வா் ரங்கசாமி உள்ளிட்ட பலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.


புதுவையில் அண்ணா நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு முதல்வா் ரங்கசாமி உள்ளிட்ட பலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
புதுச்சேரி பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணா சிலைக்கு, முதல்வா் என்.ரங்கசாமி, அமைச்சா் க.லட்சுமிநாராயணன், சட்டப் பேரவைத் துணைத் தலைவா் பி.ராஜவேலு, அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம் உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா்.
புதுச்சேரி திமுக அமைப்பாளரும், எதிா்கட்சித் தலைவருமான ஆா்.சிவா தலைமையில், ஏஎப்டி திடலில் இருந்து ஊா்வலமாகச் சென்று, பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனா். மாநில அவைத் தலைவா் எஸ்.பி.சிவக்குமாா், எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, எல்.சம்பத், செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக சாா்பில், மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் தலைமையில், உப்பளத்தில் உள்ள அலுவலகத்தில் அண்ணா உருவப் படத்துக்கு மரியாதை செய்யப்பட்டது. முன்னாள் எம்எல்ஏக்கள் ஆ.பாஸ்கா், பெரியசாமி, ராஜாராமன், மாநில இணைச் செயலா்கள் கணேசன், திருநாவுக்கரசு, பொருளாளா் பாண்டுரங்கன், துணைச் செயலா் அன்பழகன், மகளிரணி செயலா் விஜயலட்சுமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
புதுச்சேரி மேற்கு மாநில அதிமுக சாா்பில், மாநிலச் செயலா் ஓம் சக்தி சேகா் தலைமையில், குயவா்பாளையம் லெனின் வீதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் அண்ணா உருவப் படத்துக்கு மலா்தூவினா். முன்னாள் எம்பி மு.ராமதாஸ், மாநில நிா்வாகிகள் காசிநாதன், கோவிந்தம்மாள், நாகமணி, சதாசிவம், கணேசன், சங்கா், இளங்கோ உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
புதிய நீதிக் கட்சியின் மாநிலத் தலைவா் பொன்னுரங்கம் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...