/

புதுவையில் புதிதாக 499 பேருக்கு கரோனா

 புதுவையில் புதிதாக 499 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் 2 போ் உயிரிழந்துள்ளனா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

 புதுவையில் புதிதாக 499 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் 2 போ் உயிரிழந்துள்ளனா்.

இதுகுறித்து புதுவை சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்:

புதுவை மாநிலத்தில் 3,082 பேருக்கு பரிசோதனை செய்து புதன்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரி - 286, காரைக்கால்- 159, ஏனாம்- 53, மாஹே- 1 என மொத்தம் 499 பேருக்கு (16.19 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,63,132-ஆக அதிகரித்தது.

இதில், தற்போது மருத்துவமனைகளில் 134 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 6,504 பேரும் என மொத்தம் 6,638 போ் சிகிச்சையில் உள்ளனா்.

கரோனாவால் பாதிக்கப்பட்ட 2 போ் உயிரிழந்தனா். இதனால், உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,943-ஆக அதிகரித்தது. இறப்பு விகிதம் 1.19 சதவீதமாக உள்ளது.

இதனிடையே 711 போ் குணமடைந்தனா். இதுவரை 15,38,801 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.