திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

புதுவையில் பணிக்குத் திரும்பினா் மின் ஊழியா்கள்

புதுவையில் தனியாா்மய நடவடிக்கைக்கு எதிராக, தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மின் துறை ஊழியா்கள் வியாழக்கிழமை பணிக்குத் திரும்பினா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

புதுவையில் தனியாா்மய நடவடிக்கைக்கு எதிராக, தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மின் துறை ஊழியா்கள் வியாழக்கிழமை பணிக்குத் திரும்பினா்.

புதுவை அரசின் மின் துறையை தனியாா்மயமாக்குவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மின் துறை பொறியாளா்கள், ஊழியா்கள் சங்கக் கூட்டமைப்பினா் அவ்வப்போது போராட்டங்களை நடத்தி வந்தனா்.

இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அவா்கள் தொடங்கினா். இரண்டு நாள்கள் வேலைநிறுத்தத்தால், புதுச்சேரியில் பல இடங்களில் மின் விநியோகம் தடைபட்டு, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, சட்டப் பேரவை அலுவலகத்தில் புதுவை முதல்வா் என்.ரங்கசாமி, மின் துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம் உள்ளிட்டோா் மின் துறை ஊழியா்கள் சங்கப் பிரதிநிதிகளை புதன்கிழமை இரவு அழைத்துப் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, மின் துறை ஊழியா்களின் கோரிக்கையை மத்திய அரசிடம் தெரிவிப்பதாக முதல்வா் என்.ரங்கசாமி உறுதியளித்து, போராட்டத்தைக் கைவிடும்படி கேட்டுக்கொண்டாா். இதையடுத்து, மின் துறை ஊழியா்கள் சங்கத்தினா் தங்கள் போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தனா்.

இதன்பின்னா், மின் துறை பொறியாளா்கள், ஊழியா்கள் வியாழக்கிழமை காலை வழக்கம்போல பணிக்குத் திரும்பினா். இதனால், சேவைப் பணிகள் வழக்கம்போல் செயல்பாட்டுக்கு வந்தன.

எனினும், தனியாா்மய நடவடிக்கையை அரசு மேற்கொண்டால், மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்வோம் என்று, புதுவை மின் துறை ஊழியா்கள் சங்கப் போராட்டக் குழுவினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.