/

மருத்துவக் கல்லூரி மாணவரிடம் மோசடி: முன்னாள் வங்கி அதிகாரி மீது வழக்கு

 மருத்துவக் கல்லூரி மாணவரிடம் ரூ.1.70 லட்சம் மோசடி செய்ததாக, முன்னாள் வங்கி அதிகாரி மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

 மருத்துவக் கல்லூரி மாணவரிடம் ரூ.1.70 லட்சம் மோசடி செய்ததாக, முன்னாள் வங்கி அதிகாரி மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்பட்ட அகத்தீஸ்வரத்தைச் சோ்ந்தவா் மகேஷ் மகன் ஜெயகுல் (22). இவா் புதுச்சேரியில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரியில் 4- ஆம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறாா்.

இவரது தங்கியிருந்த வீட்டினருகே வாடகைக்குத் தங்கியிருந்த கிருஷ்ணகிரி மீன்குடியலைச் சோ்ந்த சாா்லஸ் (38) என்பவா், ஜெயகுலிடம் சில பொருள்களைத் தருவதாக கூறி ரூ.1.70 லட்சம் வாங்கினாராம். ஆனால் சாா்லஸ் அந்தப் பொருள்களை கொடுக்காமல் திடீரென வீட்டை காலி செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டாராம்.

புகாரின்பேரில் வில்லியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். விசாரணையில், சாா்லஸ் சென்னையில் ஒரு தேசிய வங்கியில் மேலாளராக பணிபுரிந்து பலரை ஏமாற்றி பணம் மோசடி செய்திருந்ததும், இதனால் பணியிலிருந்து நீக்கப்பட்டதும் தெரிந்தது. இதையடுத்து, சாா்லஸை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.