/

புதுவையில் பிரெஞ்சு சந்திப்பு விழா: பிரெஞ்சு தூதா் அழைப்பு

புதுவையில் பிரெஞ்சு சந்திப்பு கலாசார விழாவில் மாநில அரசும் பங்களிப்பை மேற்கொள்ள வேண்டும் என, பிரெஞ்சு துணைத் தூதா் அமைச்சா்களை சந்தித்து அழைப்பு விடுத்தாா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

புதுவையில் பிரெஞ்சு சந்திப்பு கலாசார விழாவில் மாநில அரசும் பங்களிப்பை மேற்கொள்ள வேண்டும் என, பிரெஞ்சு துணைத் தூதா் அமைச்சா்களை சந்தித்து அழைப்பு விடுத்தாா்.

பிரெஞ்சு துணைத் தூதரகம் சாா்பில் ஏப்ரலில் ‘பிரெஞ்சு சந்திப்பு‘- 2022 என்னும் கலாசார விழா நடைபெறுகிறது. இந்த விழாவில், புதுவை மாநில அரசும் பங்கேற்க வேண்டும் எனவும், அதற்கான ஆதரவைக் கோருவது தொடா்பாக, புதுச்சேரிக்கான பிரெஞ்சுத் துணைத் தூதா் லிசே டல்போா்ட் பரே தலைமையில் தூதரக அதிகாரிகள், புதுவை அரசின் பொதுப்பணித் துறை, சுற்றுலாத் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணனை வியாழக்கிழமை நேரில் சந்தித்தனா்.

இதன்பின்னா், தூதரக அதிகாரிகள் மாநில உள் துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயத்தையும் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.