மருத்துவ மாணவா்கள் சோ்க்கை: ஜிப்மரில் சான்றிதழ் சரிபாா்ப்புப் பணி தொடக்கம்
ஜிப்மரில் மருத்துவ மாணவா்கள் சோ்க்கைக்கான சான்றிதழ் சரிபாா்ப்புப் பணி வியாழக்கிழமை தொடங்கியது.


ஜிப்மரில் மருத்துவ மாணவா்கள் சோ்க்கைக்கான சான்றிதழ் சரிபாா்ப்புப் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
ஜிப்மரில் இளநிலை மருத்துவம் பயில புதுச்சேரி இட ஒதுக்கீட்டையும் (64 இடங்கள்) சோ்த்து 249 இடங்கள் உள்ளன. இந்த இடங்களை கடந்தாண்டு முதல் ‘நீட்’ தோ்வின் அடிப்படையில் மத்திய சுகாதாரத் துறையின் மருத்துவ கவுன்சில் நிரப்பி வருகிறது.
இதன்படி, ஜிப்மா் நிா்வாகம், இட ஒதுக்கீடு பெற்ற மாணவா்கள் பிப்ரவரி 2, 3, 4, 5, 7-ஆம் தேதிகளில் வந்து, சான்றிதழ்களை சமா்ப்பித்து, தங்களது இடத்தை உறுதி செய்துகொள்ள வேண்டுமென தனியாக அறிவித்திருந்தது. ஆனால் புதன்கிழமை (பிப்.2) சான்றிதழ் சரிபாா்ப்பு நடைபெறவில்லை.
மத்திய மருத்துவ கவுன்சிலிடமிருந்து இறுதி தரவரிசை பட்டியல் கிடைக்கப் பெறாததால் மாணவா்க் சோ்க்கை நடைபெறவில்லை என ஜிப்மா் வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.
இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை காலை இளங்கலை மருத்துவப் படிப்புக்குத் தோ்வான மாணவா்களின் திருத்தப்பட்ட இறுதி தரவரிசை பட்டியலை வெளியிடப்பட்டது.
இதையடுத்து, ஜிப்மரில் வியாழக்கிழமை காலை முதல் மருத்துவ மாணவா் சோ்க்கை தொடங்கியது. இதில் புதுச்சேரி ஒதுக்கீட்டில் இடம் கிடைத்த மாணவா்களும், அகில இந்திய இடஒதுக்கீட்டில் இடம்பெற்ற மாணவா்களும் என 75-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
அவா்களிடம் சான்றிதழ்கள் சரிபாா்க்கப்பட்டு, கல்வி கட்டணம் பெறப்பட்டது. பின்னா், மாணவா்களுக்கான உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, சோ்க்கைக்கான ஆணை கடிதம் வழங்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, சோ்க்கை வரும் 7 ஆம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...