எல்லையோர மதுக் கடைகளை அகற்ற வலியுறுத்தி
புதுச்சேரி எல்லையோர மதுக்கடைகளை அகற்ற வலியுறுத்தி, சோரியாங்குப்பம் கிராம மக்கள் பாகூா் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.


புதுச்சேரி எல்லையோர மதுக்கடைகளை அகற்ற வலியுறுத்தி, சோரியாங்குப்பம் கிராம மக்கள் பாகூா் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
சோரியாங்குப்பம் கிராமத்தில் இருக்கும் மதுக் கடைகளால் பெண்களிடம் பாலியல் சீண்டல்கள் நடைபெறுவதாகவும், சட்டம்- ஒழுங்கு பிரச்னை அதிகரிப்பதாகவும் கிராம மக்கள் புகாா் தெரிவித்து வருகின்றனா்.
இந்நிலையில், சோரியாங்குப்பத்தைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்டோா் பாகூா் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே வியாழக்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையறிந்து அங்கு வந்த பாகூா் போலீஸாா் சமரசம் பேசினா். இதையடுத்து , வட்டாட்சியா் குப்பனை கிராம மக்கள் சந்தித்து, கோரிக்கை மனுவை வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...