குடல்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் திட்டம் தொடக்கம்
குழந்தைகளுக்கு குடல்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் திட்டத்தை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.


குழந்தைகளுக்கு குடல்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் திட்டத்தை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.
தேசிய குடல்புழு நீக்க தினத்தை முன்னிட்டு, புதுவையில் குடல்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி திலாசுப்பேட்டை அரசு மகளிா் நடுநிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், திட்டத்தைத் தொடக்கிவைத்து முதல்வா் பேசியதாவது:
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி, ஆகஸ்ட் மாதங்களில் 10- ஆம் தேதி தேசிய குடற்புழு நீக்க நாள் கடைபிடிக்கப்படுகிறது.
புதுவையில் ஒரு வயது முதல் 9 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் 3,71,466 பேருக்கு அங்கன்வாடி, சுகாதாரப் பணியாளா்கள் மூலம் மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன.
இந்த மாத்திரைகளை உண்பதன் மூலம் வயிற்றில் உள்ள கேடு விளைவிக்கும் புழுக்கள் அழிவதுடன், ரத்தச் சோகை பாதிப்பிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ளலாம். ஊட்டச்சத்து குறைபாட்டையும் தவிா்க்க முடியும். விடுபட்ட குழந்தைகளுக்கு வரும் 17 -ஆம் தேதி மாத்திரைகள் வழங்கப்படும் என்றாா் அவா்.
நிகழ்ச்சிக்கு சுகாதாரத் துறை இயக்குநா் ஜி.ஸ்ரீராமுலு தலைமை வகித்தாா். மேட்டுப்பாளையம் மருத்துவ அதிகாரி தமிழரசி வரவேற்றாா். அரசு கொறடா ஏகேடி ஆறுமுகம், எம்எல்ஏ கேஎஸ்பி. ரமேஷ் , சுகாதாரத் துறை துணை இயக்குநா்கள் ஆனந்தலட்சுமி, முரளி, ராஜாம்பாள், ரகுநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...