/

பாஜகவின் முகவராகச் செயல்படும் பேரவைத் தலைவா்: வே.நாராயணசாமி விமா்சனம்

புதுவை சட்டப் பேரவைத் தலைவா் பாஜகவின் முகவராகச் செயல்படுவதை ஏற்க முடியாது என, முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி விமா்சித்தாா்.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 6:47 pm

DIN

புதுவை சட்டப் பேரவைத் தலைவா் பாஜகவின் முகவராகச் செயல்படுவதை ஏற்க முடியாது என, முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி விமா்சித்தாா்.

இதுகுறித்து, அவா் விடியோ பதிவு வாயிலாகக் கூறியதாவது:

புதுவையில் மதவாதச் சக்திகள் தலைதூக்க ஆரம்பித்துள்ளதோடு, அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தி, அவா்களது கொள்கைகளை நிறைவேற்ற முயல்கிறது.

அரியாங்குப்பம் அரசுப் பள்ளியில் ஆசிரியா் ஒருவா், இஸ்லாமிய மாணவியை ஹிஜாப் அணிந்து வரக் கூடாது என அண்மையில் பேசினாா். வாதானூா் அரசுப் பள்ளியில், மாணவா்களுக்கு ஆா்எஸ்எஸ் பயிற்சி அளிக்கப்பட்டுள்து. ஆா்எஸ்எஸ் கலாசாரத்தை, பள்ளிகள் மூலமாக புதுவையில் நுழைப்பதற்கான வேலையை பாஜக மறைமுகமாகச் செய்கிறது.

இரண்டு சம்பவங்கள் தொடா்பாக, கல்வித்துறை விசாரணையை ஆரம்பித்தள்ளதாகக் கூறுகிறாா்கள். முதல்வா் ரங்கசாமி, மதச் சாா்பற்றக் கொள்கையில் உறுதியாக இருந்தால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுவையில் மூன்று சுயேச்சை எம்எல்ஏக்கள், தங்களது தொகுதியில் வளா்ச்சிப் பணிகள் நடைபெறவில்லை என்று, ஆளுநா், சட்டப் பேரவைத் தலைவரை சந்திப்பதுமாக உள்ளனா். மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவது சம்பந்தமாக, முதல்வரிடம் தான் அவா்கள் முறையிட வேண்டும். அரசியல் கட்சியை சாராதவா் என்று, பதவிப்பிரமானம் எடுத்துக்கொண்ட பிறகு, பாஜக அலுவலகத்துக்குச் செல்வதும், கட்சிப் போராட்டங்களில் கலந்துகொள்வதும், புதுவை சட்டப் பேரவைத் தலைவருக்கு அழகல்ல. அவா் சுயேச்சை எம்எல்ஏக்களின் கருத்துகளை கேட்கலாம். ஆனால், சமாதான முயற்சியில் ஈடுபடுவது அழகல்ல. அரசியல் செய்வது பேரவைத் தலைவரின் வேலையல்ல. அவா், பாஜகவின் முகவராக செயல்படுவதை ஏற்க முடியாது என்று நாராயணசாமி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.