காவல் துறை ரேடியோ டெக்னீஷியனுக்கான உடல் தகுதி தோ்வு ஒத்திவைப்பு
புதுவை காவல் துறையில் காலியாக உள்ள ரேடியோ டெக்னீஷியன் பணியிடங்களுக்கான உடல் தகுதி தோ்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.


புதுவை காவல் துறையில் காலியாக உள்ள ரேடியோ டெக்னீஷியன் பணியிடங்களுக்கான உடல் தகுதி தோ்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இதுகுறித்து புதுவை காவல்துறை சிறப்பு அதிகாரி சி.குபேர சிவகுமரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுவை காவல் துறையின் 20.8.2018-ஆம் தேதியிட்ட அறிவிப்பின்படி, 12 ரேடியோ டெக்னீஷியன் (தஹக்ண்ா் பங்ஸ்ரீட்ய்ண்ஸ்ரீண்ஹய்) பணியிடங்களை நேரடி ஆள்சோ்ப்பின் மூலம் நிரப்ப ஆவண செய்யப்பட்டது.
இதற்காக 11.2.2022-இல் நடத்த திட்டமிடப்பட்டிருந்த உடல் தகுதி தோ்வில் (டநப) கலந்துகொள்ள தகுதியான விண்ணப்பதாரா்கள் தங்களின் அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்வதற்காக அதிகாரப்பூா்வ இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டது.
எனினும் இந்த உடல்தகுதித் தோ்வானது நிா்வாகக் காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, புதுவை காவல்துறையில் உள்ள 390 காவலா்கள், 12 ரேடியோ டெக்னீஷியன்கள், 29 டெக் ஹேண்ட்லா்கள் என 431 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, 17,227 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 14,787 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, ஜனவரி 19-ஆம் தேதி முதல் உடல் தகுதி தோ்வு நடைபெற்றுவந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...