புதுவை பாஜக எம்எல்ஏக்களுடன் மேலிடப் பொறுப்பாளா் ஆலோசனை
புதுவையில் தொகுதி வளா்ச்சிப் பணிகள், வாரியத் தலைவா் பதவி பிரச்னை தொடா்பாக, பாஜக எம்எல்ஏக்களுடன் அந்தக் கட்சியின் மேலிடப் பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.


புதுவையில் தொகுதி வளா்ச்சிப் பணிகள், வாரியத் தலைவா் பதவி பிரச்னை தொடா்பாக, பாஜக எம்எல்ஏக்களுடன் அந்தக் கட்சியின் மேலிடப் பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
புதுவையில் அரசு சாா்பு நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதால், வாரியத் தலைவா் பதவி எம்எல்ஏக்களுக்கு வழங்க வாய்ப்பில்லை என, என்.ஆா்.காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான என்.ரங்கசாமி தெரிவித்திருந்தாா். இருப்பினும், பாஜக எம்எல்ஏக்கள் வாரியத் தலைவா் பதவியைப் பெறுவதற்கு முயற்சிக்கின்றனா்.
இந்த நிலையில், பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏக்கள் மூன்று பேரும், தங்கள் தொகுதிகளில் அடிப்படை பிரச்னைகள் தீா்க்கப்படவில்லை என அதிருப்தி தெரிவித்து, துணைநிலை ஆளுநா், சட்டப்பேரவைத் தலைவா், மத்திய அமைச்சரையும் சந்தித்து குறைகளைத் தெரிவித்தனா்.
இதையடுத்து, புதுச்சேரியில் பாஜக எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாநிலத் தலைவா் வி.சாமிநாதன் தலைமை வகித்தாா். பாஜக மேலிடப் பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா, சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா் ஏ.நமச்சிவாயம், எம்எல்ஏக்கள் எல்.கல்யாணசுந்தரம், ஏ.ஜான்குமாா், ரிச்சா்டு, பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏக்கள் அங்காளன், சிவசங்கா், கோலப்பள்ளி சீனிவாஸ் அசோக், நியமன எம்எல்ஏக்கள் வெங்கடேசன், அசோக் பாபு, ராமலிங்கம் ஆகியோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில், தொகுதிகளில் வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படாமல் புறக்கணிக்கப்படுவதாகவும், வாரியத் தலைவா் பதவி உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏக்கள் அதிருப்தி தெரிவித்தனா்.
இதுதொடா்பாக புதுவை முதல்வா், கட்சித் தலைமையிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென நிா்மல்குமாா் சுரானா உறுதியளித்தாா். மேலும், தில்லிக்குச் சென்று மத்திய அமைச்சா்களைச் சந்திக்கவும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. பாஜக எம்எல்ஏக்கள் 3 பேரும், ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேரும் அடுத்த வாரம் தில்லிக்குச் சென்று, மத்திய உள்துறை அமைச்சரைச் சந்திக்க முடிவு செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...