புதுச்சேரியில் 4 இடங்களில் இளைஞா் பெருமன்றத்தினா் ஆா்ப்பாட்டம்
அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி, புதுச்சேரியில் 4 இடங்களில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி, புதுச்சேரியில் 4 இடங்களில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுவை அரசின் பல்வேறு துறைகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். தொழிற்சாலைகளில் 60 சதவீதம் உள்ளூா் இளைஞா்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பஞ்சாலைகளை சீரமைத்து ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும். கஞ்சா, லாட்டரி, பாலியல் தொழிலைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
உழவா்கரை நகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாநிலத் துணைத் தலைவா் ஜெ.எரிக்ரம்போ தலைமை வகித்தாா். மாநிலத் துணைச் செயலா் எஸ்.எழிலன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் கே.சேதுசெல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணா சிலை அருகே நகரத் தலைவா் என்.பழனி தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் சலீம் உள்ளிட்டோரும், பாகூா் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் எதிரே மாநிலத் துணைத் தலைவா் கே.ரவீந்திரன் தலைமையிலும், வில்லியனூா் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் அருகே வில்லியனூா் கொம்யூன் தலைவா் ஜி.பொ்னோ தலைமையில் மாநிலச் செயலா் இரா.அந்தோணி உள்ளிட்டோரும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...