புதுவையில் மேலும் 162 பேருக்கு கரோனா
புதுவையில் வியாழக்கிழமை மேலும் 162 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், ஒருவா் உயிரிழந்தாா்.


புதுவையில் வியாழக்கிழமை மேலும் 162 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், ஒருவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:
புதுவை மாநிலத்தில் 2,417 பேருக்கு பரிசோதனை செய்து வியாழக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரி - 102, காரைக்கால் - 36, ஏனாம் - 22, மாஹே - 2 போ் என மொத்தம் 162 பேருக்கு (6.70 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,64,922-ஆக அதிகரித்தது. இதில் 5,506 போ் சிகிச்சையில் உள்ளனா்.
கரோனாவால் புதுச்சேரியில் ஒருவா் உயிரிழந்தாா். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,956-ஆக அதிகரித்தது. இறப்பு விகிதம் 1.19 சதமாக உள்ளது. மேலும் 741 போ் குணமடைந்தனா். இதுவரை 15,50,874 கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...